ஹெர்க்கோலுபஸ் அல்லது சிவப்பு கிரகம்
மனித குலத்திற்கான புத்தகம்
இலவச புத்தகம்

இந்த புத்தகத்தில் நான் உறுதிப்படுத்துவது, ஒரு தீர்க்கதரிசனம். அது மிக விரைவாகவே நிறைவேறும், ஏனெனில் இக்கிரகத்தின் முடிவை குறித்து நான் உறுதியாக இருக்கிறேன்; நான் அதை அறிவேன். நான் இதுகுறித்து மக்களை பயமுறுத்தவில்லை, ஆனால் எச்சரிக்கிறேன், ஏனெனில் இந்த விதிப்பயனுக்குள்ளான மனித இனத்தை குறித்து நான் வேதனைப்படுகிறேன். இந்நிகழ்வுகள் வருவதற்கு நீண்ட காலம் இல்லை மேலும் மாயையான விஷயங்களுக்காக வீணடிக்க இப்போது நேரமுமில்லை. – வி.எம். ரபோலு

உலகின் அனைத்து மூலைகளிலும் இறுதி நேரம் தொடர்பான பாரம்பரியங்கள் மற்றும் தீர்க்கதரிசன விஷயங்களை நாம் கண்டறியமுடியும், இவை அனைத்தும் ஒன்றை ஒன்று ஒத்திருக்கின்றன.

பெரும்பாலான இந்த அனுமானங்கள் அண்மையில் நடக்கவிருக்கும் துருவ மாற்றம், அதன் விளைவாக பனிப்பாறை உருகுதல் மற்றும் வலுவான பூகம்பங்கள் மற்றும் சுனாமி காரணமாக மிகப்பெரிய அளவிலான நிலம் மறைந்து போதல் போன்ற பூமியில் நிகழவிருக்கும் மிகப்பெரிய பேரழிவு குறித்து நம்மை எச்சரிக்கின்றன.

எண்ணிலடங்கா தீர்க்கதரிசனங்கள் சில விஷயங்களை பொதுவாக கொண்டுள்ளன: அவ்வப்போது நம்மை நோக்கி வரக்கூடிய மிகப்பெரிய கிரகத்தை குறித்து அவை குறிப்பாக பேசுகின்றன. அந்த கிரகம் முந்தைய காலங்களில் நமது சூரிய மண்டலத்திற்கு வந்திருந்து, லெமூரியா மற்றும் அட்லாண்டிஸ் நாகரீகத்தை துடைத்தெடுக்கக்கூடிய அளவிலான பேரழிவுகளை ஏற்படுத்தியிருக்கும். இப்போது, நமது தற்போதைய நாகரிகத்திற்கும் அது முற்றுப்புள்ளி வைத்து, ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கப்போகிறது.

பால், குளிர்ந்த கிரகம், சிவப்பு கிரகம், வோர்ம்வுட், அஜென்ஜோ, ஹெர்க்கோலுபஸ், பர்னார்ட் I, மற்றும் பல போன்ற பல்வேறு பெயர்களின் கீழ் உள்ள பல பாரம்பரியங்கள், தீர்க்கதரிசனங்கள் மற்றும் புனித புத்தகங்களில் இது அடையாளம் காணப்பட்டுள்ளது. அத்தகைய ஒரு கிரகம் ஏற்கனவே தொலைநோக்கிகளின் மூலமாக காணப்பட முடியும், மேலும் அதன் அளவு வியாழன் கிரகத்தை காட்டிலும் ஆறு மடங்குகள் பெரிதாக இருந்திடும்.

வாழ்க்கையின் ஓட்டத்தில், அனைத்தும் அதன் ஆரம்பம் அல்லது முடிவிற்கு திரும்பத்தான் வேண்டும். அதுபோல்தான் ஹெர்க்கோலுபஸ் உடன் நமது முந்தைய சந்திப்பின்போது, அது அட்லாண்டியன் நாகரீகத்திற்கு ஒரு முடிவை கொண்டு வந்தது. இந்த உண்மைகள் பல்வேறு மதங்கள் மற்றும் கலாச்சாரங்களின் அனைத்து “உலகளாவிய வெள்ளங்கள்” மூலம் முறையாக விவரிக்கப்பட்டுள்ளன.

பல மக்கள் இத்தகைய அண்ட நிகழ்வு குறித்து பேசியுள்ளனர். அவர்களுள் வி.எம். ரபோலுவும் ஒருவர், இவர் விழித்தெழுந்த உணர்வு நிலை திறன்களைப் பயன்படுத்தி அந்த கிரகத்தின் அணுகுமுறையை ஆராய்ந்தார், இது அவரை அந்த பரலோக உடல் குறித்த ஆராய்ச்சியை செய்ய உதவியது. அல்சியோன் சங்கத்தினால் உலகம் முழுவதும் இலவசமாக அனுப்பப்பட்ட ‘ஹெர்க்கோலுபஸ் அல்லது சிவப்பு கிரகம்’ என்று பெயரிடப்பட்ட அவரது படைப்பில் அவர் பின்வருமாறு எழுதுகிறார்:

‘ஹெர்க்கோலுபஸ் பூமிக்கு மிக அருகாமையில் நெருக்கி சூரியனோடு நேர்கோட்டிற்கு வருகையில், ஒட்டுமொத்த கிரகம் முழுவதும் கொடிய தொற்று நோய்கள் பரவ தொடங்கும். எந்த மருத்துவர்களும் அதிகாரப்பூர்வ அறிவியலும் இது எவ்வகையான நோய்கள் என்பதையோ அல்லது அவற்றை எவ்வாறு குணமாக்குவது என்பதையோ அறிந்திருக்க மாட்டார்கள். இத்தகைய தொற்று நோய்களின்பால் அவர்கள் ஆற்றலற்றவர்களாகி போவார்கள்.‘

‘பயங்கரம் மற்றும் இருளிற்கான தருணம் வரும்: நிலநடுக்கம், பூகம்பங்கள் மற்றும் மிகப்பெரும் அலைகள் தோன்றிடும். மனிதர்கள் மனதளவில் நிலையற்று போவார்கள், ஏனெனில் அவர்களால் சாப்பிடவோ தூங்கவோ முடியாது. ஆபத்தை எதிர் கொள்கையில், அவர்கள் தங்களைத் தாங்களே முற்றிலும் பைத்தியம் பிடித்த நிலையில் மொத்தமாக சரிவில் தள்ளுவார்கள்.’

வி.எம். ரபோலு

வி.எம். ரபோலு அவர்கள், எஸோடெரிசிசத்தில் ஒரு சிறந்த கொலம்பிய ஆராய்ச்சியாளர், இந்த அச்சுறுத்தல் குறித்து மனிதகுலத்தை எச்சரிக்க அவர் குரல் எழுப்பினார். உண்மையில், அது நமது நாகரிகம் மற்றும் கலாச்சாரத்திற்கு முடிவை கொண்டு வரவிருக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். அவரது புத்தகத்தில், உளவியல்ரீதியான குறைபாடுகளை களைவதற்கான முறைகள் மற்றும் நிழலிடா திட்டத்திற்கான உத்திகள் போன்றவற்றை எடுத்துரைக்கிறார், ஏனெனில் இவை மட்டுமே வரவிருக்கும் பேரழிவிலிருந்து தப்பித்துக்கொள்ள தற்போதிருக்கும் சூத்திரங்கள் என்பதை அவர் கற்பிக்கிறார்.

வி.எம். ரபோலு பின்வருமாறு கூறி தனது படிப்பை நிறைவு செய்கிறார்:

‘அன்பார்ந்த வாசகரே: நான் மிகவும் தெளிவாக பேசுகிறேன் எனவே நீங்கள் தீவிரமாக பணியாற்ற தொடங்க வேண்டிய தேவையை உணர்ந்து கொள்ள முடியும். யாரெல்லாம் செயல்படுகிறார்களோ அவர்கள் அபாயத்திலிருந்து காக்கப்படுவர். இது, நீங்கள் கோட்பாடுகளை உருவாக்கவோ அல்லது விவாதங்களை கொண்டிருக்கவோ அல்ல, இந்தப் புத்தகத்தின் வாயிலாக நான் வழங்கியிருக்கும் உண்மையான போதித்தலை நீங்கள் உணரவே ஆகும். நாம் வேறு எதையும் நாட முடியாது.’

அல்சியோன் சங்கம்

‘ஹெர்க்கோலுபஸ் அல்லது சிவப்பு கிரகம்’ என்ற படைப்பின் பரப்புதல் மற்றும் விநியோகத்தில் முகவர்-உடனுழைப்பாளராக நியமிக்கப்பட்ட இலாப நோக்கற்ற ஓர் அமைப்பாகும்.

ஆசிரியர்: Joaquín Amórtegui Valbuena (V.M. Rabolú)
வெளியீட்டாளர்: Ángel Prats

அல்சியோன் சங்கம் 588698 என்ற தேசிய எண்ணுடன் கூடிய, பிரிவு 1, குழு 1 என்ற உள்துறை அமைச்சகத்திற்குள்ளான சங்கங்களுக்கான தேசிய பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட ஒரு சங்கமாகும், அது தன் தலைமையகத்தை P.O. Box 4, 09080 என்பதில், புர்கோஸ் நகரில் (ஸ்பெயின்) கொண்டுள்ளது.

ஆசிரியரைப் பற்றி

V.M. Rabolu (1926 – 2000)
வி.எம். ரபோலு (1926 – 2000)

வி.எம். ரபோலு அவர்கள் (1926 – 2000) டோலிமாவில் (கொலம்பியா) பிறந்தார். 1952ல் அவர் உண்மையான அறிவாற்றலை கண்டறிந்தார், மேலும் நீண்டகால எஸோட்டெரிக் பயிற்சியின் வாயிலாக அவர் அசாதாரண திறன்களை வளர்த்துக் கொண்டார், அது இறுதியில் அவரை உலகளவில் மிகவும் புகழ்பெற்ற ஆன்மீக வழிகாட்டியாக மாற்றியது.

நமக்காக காத்திருக்கக்கூடிய எதிர்காலத்தை குறித்து அறிந்து, அவர் மனிதகுலம் தங்களது சொந்த ஆன்மீக மீளுருவாக்கத்தை அடைவதற்கான சூத்திரங்களை கற்பிக்க தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். இவ்வாறாக 70களில் இருந்தே, எப்போதும் நற்பண்புமிக்க மற்றும் தன்னலமற்ற வழியில் அவர் சர்வதேச அளவிலான விரிவுரைகள், பாடத்திட்டங்கள் மற்றும் மாநாடுகள் வாயிலாக உண்மையான ஞானத்தை பகிரங்கமாக கற்பிக்கக்கூடிய அயராத பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

1998 ஆம் ஆண்டில் அவர், “ஹெர்க்கோலுபஸ் அல்லது சிவப்பு கிரகம்” என்ற புத்தகத்தை எழுதினார். அவரது நேரடியான மற்றும் தன்நினைவுகொண்ட அனுபவத்தின் அடிப்படையில், வி.எம். ரபோலு அவர்கள் குறுகிய காலத்தில் நமது கிரகத்தில் நிகழவிருக்கும் பயங்கரமான நிகழ்வுகள் குறித்து விளக்குகிறார், மேலும் இத்தகைய ஆழமான மாற்றத்தை அடையும் பொருட்டு மனிதர்கள் பின்பற்றவேண்டிய வழியையும் விளக்குகிறார். இன்றைய காலகட்டத்தில், அவரது படைப்பில் இருக்கக்கூடிய கூற்றுகள் 80 நாடுகளுக்கும் மேலாக அவரது கற்பித்தலிலிருந்து அனுகூலமடைந்த பெரிய எண்ணிக்கையிலான வாசகர்களால் அடையாளம் காணப்படுகின்றன.

வி.எம். ரபோலு அவர்கள், விழித்தெழுந்த உணர்வுநிலை கொண்ட அபூர்வமான நபர்களுள் ஒருவர். மேலும் மேலும் அதிகமாக இழந்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்தின் தனித்துவமான அறிகுறிகளாக, பொருள்முதல்வாதம் மற்றும் மதிப்புகள் இல்லாமை போன்றவை இருக்கிறபோது, அவரது கற்பித்தல் இக்காலங்களில் அத்தியாவசியம் ஆகின்றன.

“நான் பயத்தை பரப்புபவன் அல்ல, வரவிருப்பதையும் நிகழவிருப்பதையும் குறித்து எச்சரிக்கை செய்யும் ஒரு மனிதன்.”

வி.எம். ரபோலு

மந்திரங்கள்

இந்தப் பிரிவில், நிழலிடா திட்டத்திற்கான மந்திரங்களின் முறையான உச்சரிப்பை நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு, வி.எம். ரபோலு அவர்கள் உச்சரிப்பதை நீங்கள் கவனிக்கலாம்.

பா ரா ஆன்

லா ரா ஸ்

அல்சியொன் சங்கத்துடன் உடனுழைத்தல்

அல்சியோன் சங்கம் என்பது சட்டப்பூர்வமாக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். ஓர் இலாப நோக்கற்ற அமைப்பாக, இதன் அனைத்து நடவடிக்கைகளும் எந்தவிதமான நிதி அனுகூலமுமின்றி நன்மதிப்புமிக்க வகையில் செயலாற்றப்படுகிறது.

‘ஹெர்க்கோலுபஸ் அல்லது சிவப்பு கிரகம்’ புத்தகத்தின் வெளியீட்டாளரான திரு ஏஞ்சல் ப்ராட்ஸ் அவர்களுடன் முகவர்-உடனுழைப்பாளராக அல்சியோன் சங்கம் செயல்படுகிறது; எனவே, இதன் ஒரே நோக்கம் அப்புத்தகத்தின் சர்வதேச பரப்புதல் மற்றும் விநியோகம் மட்டுமே ஆகும். அத்தகைய காரணத்திற்காக, அல்சியோன் சங்கம் அதன் முக்கிய நடவடிக்கையாக, வேறுபாடுகள் இல்லாமல் ஆர்வமிக்க எந்த நபருக்கும் அப்படைப்பு மற்றும் அதன் உலகளாவிய செய்தி விநியோகிக்கப்படும் முயற்சியில் புத்தகத்தின் இலவச பிரதிகளை உலகளாவில் எந்த இடத்திற்கும் அனுப்புகிறது.

இதுவரையில், ‘ஹெர்க்கோலுபஸ் அல்லது சிவப்பு கிரகம்’ என்ற புத்தகத்தின் இலவச பிரதியை ஆயிரக்கணக்கான வாசகர்கள் அஞ்சல் மூலமாக பெற விநியோகப் பிரச்சாரம் அனுமதித்துள்ளது. தற்போது மற்றும் நாளுக்கு நாள் இதற்கான கோரிக்கைகளின் எண்ணிக்கை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இதன் மிகப்பெரிய வெற்றியின் காரணமாக, இந்த விநியோக பிரச்சாரத்தை தொடர்வதற்கான இலக்கை நாங்கள் நிர்ணயித்துள்ளோம்.

பின்வரும் வீடியோவை பதிவிறக்கம் செய்து, மின்னஞ்சல் வாயிலாக அதனை உங்களது நண்பர்கள் மற்றும் பரிச்சயமானவர்களுக்கு அனுப்புவதன் மூலம், இப்படைப்பின் பரப்புதலுக்கு தயவுசெய்து எங்களுடன் உதவிடுங்கள்.

ஒருவேளை நீங்கள் எங்களது சங்கத்தை தொடர்பு கொள்ள விரும்பினாலோ அல்லது வி.எம். ரபோலு அவர்களின் புத்தகம் மற்றும் செய்தியின் பரப்புதல் தொடர்பாக புத்தகத்தின் வெளியீட்டாளருடன் நீங்கள் உடனுழைக்க ஆர்வம் கொண்டிருந்தாலோ அல்லது எங்களுடன் ஓர் வலுவான தொடர்பாடல் மற்றும் ஒத்துழைப்பை நீங்கள் பராமரிக்க விரும்பினாலோ, பின்வரும் முகவரிகளில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் எங்களுக்கு எழுதலாம்:

மின்னஞ்சல் செய்ய: [email protected]

சாதாரண அஞ்சல் செய்ய:
Asociación Alcione
P.O. Box 4, 09080 Burgos (Spain)

உங்களது இலவச புத்தகத்தை கோரிடுங்கள்

Tபல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கொடுக்கப்பட்டிருக்கும் முகவரிக்கு எழுதி அதனை கேட்டுக் கொள்ளுங்கள்: [email protected]
அல்லது பின்வரும் படிவத்தை பயன்படுத்தவும்

ஆர்டர் செய்வதற்கான படிவம்

உங்களது கோரிக்கையை நிர்வகிக்க நட்சத்திரக் குறி (*) இடப்பட்டுள்ள தரவுகள் தேவைப்படுகின்றன. இந்த தகவல் சேகரிக்கப்பட்டு, புத்தகத்தின் ஆர்டரை பூர்த்தி செய்ய மட்டுமே பிரத்யேகமாக பயன்படுத்தப்படுகிறது.

புத்தகத்தை பெறும் பொருட்டு, நீங்கள் சரியான மின்னஞ்சல் முகவரியை உள்ளிட வேண்டும்.

உங்களது ஆர்டரை செயல்படுத்த, படித்து, இந்தப் பெட்டியை குறியிடவும்.

சமர்ப்பிக்கவும் என்ற பொத்தானை கிளிக் செய்வதன் மூலம், தனியுரிமைக் கொள்கையின்பால் வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளை செயலாக்கம் செய்யவும், அதன் நோக்கங்களுக்காகவும் நீங்கள் ஒப்புதல் அளிக்கிறீர்கள்.

Alcyone Association